Complaint in Perambalur against AIADMK members including EPS who spread slander on DMK leaders in Madurai conference!
பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில், மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க மாநாட்டில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.இராசா ஆகியோரை அவதூறாக பேசிய “நவரசம்” கலைக்குழுவினர் மீதும், எடப்பாடி பழனிச்சாமி மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் முன்னிலையில், காவல்துறை கண்காணிப்பாளர் ஷியாமளாதேவியிடம், திமுக மாவட்ட மகளிர் அணி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி சார்பில், புகார் மனு கொடுக்கப்பட்டது!
இதில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் புஷ்பவள்ளி ராஜேந்திரன், தலைவர் தமிழரசி, மாவட்ட மகளிர் அணி தலைவர் பாத்திமா, துணை தலைவர் தனலெட்சுமி, அங்கையற்கன்னி, விஜிபுளோரா ரெஜி, செல்வராணி, சங்கீதா,முருகேஸ்வரி, சாந்தி, கண்ணகி, நட்சத்திரம், மலர்விழி, நகர் மன்ற உறுப்பினர்கள் சித்ரா,ஷாலினி, பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி செங்குட்டுவன் மற்றும் முத்தலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.