Conciliation Day in Perambalur Court!
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் (Mediation day) சமரச தீர்வு தினம் கடந்த ஏப். 8 முதல்,ஏப்.12 வரை கொண்டாடப்பட்டது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. பல்கீஸ் தலைமையில் நடந்தது. இதில் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், பொதுமக்களும் மற்றும் நீதிமன்ற ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. பல்கீஸ் பேசியதாவது: சமரசத் தீர்வு தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடந்து வருகிறது. நீதிமன்ற ஊழியர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள தெரிந்த நபர்களுக்கு சமரச மையத்தை பற்றி தெளிவாக எடுத்துக் கூறி சமரச மையத்தினை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தினர்.
சமரச மையத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சிறப்பாக செயல்படுமாறும் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு நீதிமன்றத்திலும் சமரச தீர்வு மையம் ஆரம்பிக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சமரச மையம் வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு வழக்கறிஞர்களும், சமரச தீர்வாளர்களும் முழு ஒத்துழைப்பும், ஈடுபாடும் தேவை என்பதை அறிவுறுத்தினார்.
மேலும் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட குடும்ப நல நீதிபதி தனசேகரன் மற்றும் மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், குமாரசாமி உட்பட அனைத்து சமரச தீர்வாளர்களும் சமரச தீர்வு குறித்து சிறப்புரையாற்றினர். மேலும் அனைத்து நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், வழக்கறிஞர் சங்கங்களின் தலைவர்களும், வழக்காடிகள், பொதுமக்கள் கலந்து கொணடனர்.