Congratulations to school HMs who have passed 100 per cent of the 12th class general Exam! Collector Wished

பெரம்பலூர்: பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில், பெரம்பலூர் மாவட்டத்தில் 4,495 மாணவிகளும், 4,370 மாணவர்களும் என மொத்தம் 8,865 பேர் தேர்வெழுதினர்.

இதில் 4,063 மாணவர்களும், 4,279 மாணவிகளும் என மொத்தம் 8,342 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 92.97 சதவீத தேர்ச்சியும், பெண்கள் 95.19 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 93.54 சதவீதம் பெற்று மாநில அளவில் 15வது இடத்தில் இருந்த பெரம்பலூர் மாவட்டம் இந்த ஆண்டு 94.10 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 12வது இடம் பெற்றுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 70 மேல்நிலைப் பள்ளிகளில் 4 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்பட 24 மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசுப் பள்ளிகளில் லப்பைக்குடிகாடு (பெண்கள்), எளம்பலூர் கவுள்பாளையம் மற்றும் கிழுமத்தூர் மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளிகளும் 100 சதவீத தேர;ச்சி பெற்றது.

அதனைத்தொடர்ந்து அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அன்பழகன், மகாலெட்சுமி, சுந்தரம், ஜெயக்குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தாவை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதில் எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த கல்வியாண்டிலும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பின்போது தங்களது பள்ளிகளைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் அனைவரையும் தேர்ச்சி பெற வைத்து நமது பள்ளிகளுக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த நீங்கள் வரக்கூடிய கல்வியாண்டிலும், 100 சதவீத தேர்ச்சி பெற முயற்சிக்கவேண்டும். மேலும், உங்களைப் போல் மற்ற அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் தங்களது பள்ளிகளை 100 சதவீத தேர்ச்சி பெற வைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும், என தொpவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் மணிவண்ணன், பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!