Congress demonstration in protest against the Central Government at Namakkal
மத்திய அரசை கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சத்திரம் பழைய சப்-ரிஜிஸ்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்ட தலைவர்கள் சுப்பிரமணியன், பாச்சல் சீனிவாசன், புதுச்சத்திரம் வட்டார தலைவர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஷேக்நவீத் தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்து பேசியதாவது:
மீனவர் நலனில் அக்கரை இருப்பதாக கூறிக்கொண்டு மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்பதாக வாக்குறுதி அளித்த மத்திய அரசு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தன்னுடைய சேமிப்பை நாமே எடுக்க வழியின்றி நாள் கணக்கில் வரிசையில் நிற்க வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை. இதனால் பணப்புழக்கம் முடங்கியது. மக்கள் இன்னும் அவதியுற்று வருகின்றனர்.
சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசலுக்கான கச்சா எண்ணை மிகவும் குறைந்திருக்கும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை பன்மடங்கு ஏறிக்கொண்டே வருகிறது. இதனால் விலைவாசி கடுமையாக உயர்ந்து சாமான்ய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் என பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசின் நிர்வாக சீர்கேடுகள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாண்டியன், சித்திக், குமரன், நாமக்கல் நகர தலைவர் மோகன், இளைஞர் காங்கிரஸ் பொதுசெயலாளர் மணிகோபால், ராசிபுரம் நகர தலைவர் முரளி, நாமகிரிப்பேட்டை வட்டார தலைவர் இருசப்பன், இளைஞர் காங்கிரஸ் சக்திவேல், முரளி, மாணிக்கம், துளசி, டாக்டர் பாலாஜி, ராமமூர்த்தி, மோகன்ராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.