Congress party consultation meeting in Perambalur tomorrow: State President Selva Perundagai will attend: State General Secretary Advocate T.Tamilselvan statement!
காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் த.தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாளை மாலை 4.00 மணிக்கு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசன் மீட்டிங் ஹாலில் நடைபெறும் காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்திற்கு பெரம்பலூருக்கு, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கு. செல்வ பெருந்தகை எம்எல்ஏ மற்றும் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம் எல் ஏ, அமைப்புச்செயலாளர் ராமமோகன், மாநில துணைத்தலைவர்ஜி. ராஜேந்திரன் மற்றும் மாநில தகவல் தொடர்பு பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் தஜான் அசோக் வரதராஜன் மாநில பொதுச் செயலாளர்கள் டி.செல்வம் மற்றும் அருள் பத்தையா ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
அது சமயம் பெரம்பலூர் மாவட்ட, வட்டார கிராம கமிட்டி காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.