Consecutive theft near Perambalur: 2 cell phones 1.5 pounds gold jewelery stolen! Police investigation!
பெரம்பலூர் அருகே உள்ள வடக்குமாதவி கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து (50). காட்டு கொட்டகையில் வசித்து வருகிறார். இன்று அவரது உறவினரின் துக்க நிகழச்சிக்காக குரும்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்திற்கு சென்றுவிட்டார். அவரது மனைவி அழகம்மாளும் கூலி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த அவரது மகள் சுகந்தி (19) மற்றும் அவரது அம்மா முத்தம்மாள் (70) ஆகிய இருவரும் வீட்டை பூட்டி விட்டு, ஆடு மேய்க்க சென்று விட்டனர். இன்று மதியம் சுமார் 2 மணிக்கு வந்து பார்த்த போது, பீரோவில் இருந்த அரை பவுன் மதிப்புள்ள மோதிரங்கள் 2. அரை பவுன் தங்க காசு, மற்றும் செல்போனும் களவு போயிருப்பது தெரியவந்தது.
மேலும், பச்சமுத்து வீட்டுக்கு அருகேயுள்ள அவரது சகோதரர் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த ஒரு செல்போனை மட்டும் எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து பச்சமுத்து குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார் கை ரேகை மற்றும் மோப்பநாய், தடய அறிவியல் நிபுணர்களுகடன் சென்று கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர். இது வழக்குப் பதிவு செய்த போலீசார், மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர்.