Consolidated basis, apply to workplaces in the 5 computer executable – district collector information.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் விடுத்துள்ள அறிவிப்பு :
பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், 2016 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, மாதம் ஒன்றுக்கு ரூ.11 ஆயிரம்- வீதம் தொகுப்பூதிய அடிப்படையில் 5 கணினி இயக்குபவர்கள் பணியிடங்களை நிரப்பிட தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.07.2016 ஆம் தேதியன்று 18 வயதினை பூர்த்;தி செய்தவராகவும், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் மேல்நிலையில் (Senior Grade in Typewriting) தேர்ச்சி பெற்றும், மேலும், கணினி சம்மந்தமான பட்டயப்படிப்பு (Diploma) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் 31.12.2016 பிற்பகல் வரை மட்டுமே தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்திட அனுமதிக்கப்படுவர்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி பிரிவு அலுவலகத்திலும், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அலுவலக நாட்களில் விண்ணப்பத்தினை பெற்று உரிய சான்றின் நகலுடன் இணைத்து வரும் 10.08.2016 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ கிடைக்கும்படி அனுப்பப்பட வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04328 – 225201 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம், என தெரிவித்துள்ளார்.