Construction of a new road worth Rs. 2.89 crores from Pelvadi to Artgad: Minister Sivashankar inaugurated!

பெரம்பலூர் மாவட்டம், சித்தளி ஊராட்சி பீல்வாடி கிராமத்தில் ரூ.2.89 கோடி மதிப்பிலான புதிய சாலை அமைக்கும் பணியினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று காலை கலெக்டர் கற்பகம், தலைமையில் தொடங்கி வைத்தார்.

குன்னம் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட பீல்வாடி முதல் ஆற்காடு வரை செல்லும் சாலை அமைக்கும் பணி, ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் இருந்த ஓர் ஊராட்சி ஒன்றிய சாலை. இதனை மாவட்ட சாலையாக தரம் உயர்த்தி நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 289.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

இச்சாலை தரம் உயர்த்துதல் பணியில் 3-கண்கள் கொண்ட 1 பெட்டிபாலம், ஒரு கண்கள் கொண்ட பெட்டி பாலங்கள், 2 குழாய் பாலங்கள் அமைக்கப்படுவதால் அதனைச்சுற்றியுள்ள கிராம மக்கள், பள்ளிகள், கல்லூரிகளின் மாணவ மாணவிகள், மருத்துவத்திற்கு செல்லும் நபர்கள் மற்றும் விவசாய விளைபொருட்கள் எளிதில் கொண்டு செல்ல மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பெரம்பலுார் மாவட்டத்தில் 2021-22-நிதியாண்டில் ஊராட்சி ஒன்றிய சாலைகள் / ஊராட்சி சாலைகளை மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்துதல் திட்டத்தின் கீழ் மாநில நிதியில் 19 எண்ணிக்கையிலான 42.870கி.மீட்டர் நீள சாலைகள் ரூ.34.57 கோடி செலவில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 4 எண்ணிக்கையிலான 15.350 கி.மீ நீள சாலைகள் ரூ.34.18 கோடி செலவில் பணிகள் நடைபெற்றுவருகிறது.

2022-23- நிதியாண்டில் மாநில நிதியில் ஊராட்சி ஒன்றிய சாலைகள்/ஊராட்சி சாலைகளை மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்துதல் திட்டத்தில் 12 எண்ணிக்கையிலான 31.750 கி.மீ. நீள சாலைகள் அமைக்க ரூ.47.97 கோடியில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் துவங்கபட உள்ளது.

இந்த சாலைகள் அமைக்கப்படுவதன் மூலும் கோவிந்தபுரம், சோமண்டபுதுார், எசனை, தொண்டாபாடி, பாலையூர், ஆலம்பாடி, கீழமலை கோனேரிபாளையம், அரசலுார், என்.புதுார், சாத்தனவாடி, காரை, புதுகுறிச்சி, ரெங்கநாதபுரம், வெள்ளனுார், புதுநடுவலுார், மேட்டுர், சிறுவாச்சூர், தொண்டாபாடி, அனுக்கூர், தொண்டமந்துறை, ஜெய்சங்கர்கிரஷர், வெங்கலம், பச்சமலை, எளம்பலுார், கல்பாடி, கே.புதுார், பாடாலுார், தெரணி, நாட்டார்மங்கலம், ஈச்சகாடு, அயினாபுரம், அணைப்பாடி, தொண்டமந்துறை, தழுதாழை, தழுதாழை, கொளத்துார், பரவாய், வரகூர், புதுவேட்டைக்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடைவார்கள்.

அது மட்டுமல்லாது, நபார்டு கடனுதவியுடன் பாலங்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 2021-22 நிதியாண்டில் 10 பாலப்பணிகள் நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் ரூ.19.50 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் 2 பாலப்பணிகள் நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் ரூ.12.19 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

2022-23 நிதியாண்டில் 1 பாலப்பணி நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் ரூ.4.00 கோடி மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த பாலப்பணிகளால் கல்பாடி, பனங்கூர், கொளக்காநத்தம், கருடமங்கலம், சிறுகன்பூர், அய்யலுார், குடிக்காடு, சாத்தனுார், வேப்பந்தட்டை, எழுமூர், முருக்கன்குடி, ரஞ்சன்குடி, கிருஷ்ணாபுரம், அன்னமங்கலம், நெற்குணம், நுாத்தப்பூர் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்பெறுவார்கள் , என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட பணியாளர்கள், வேப்பூர் ஊராட்சி யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், கருணாநிதி, நபார்டு மற்றும் பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், குன்னம் வட்டாட்சியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!