Construction of new barrage on Ladapuram Bokkuni river at a cost of Rs 1.766 crore: Collector Karpagam, Perambalur MLA Prabhakaran inaugurated!

பெரம்பலூர் மாவட்டத்தில் நீர் வளத் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 73 ஏரிகள் 33 அணைக்கட்டுகள் மற்றும் 2 நீர்த்தேக்கங்கள் உள்ளன. 29.03.2023 அன்று சட்டமன்றத்தில் நீர்ப்பாசனத்துறை கோரிக்கையின் போது நீர்பாசனத்துறை அமைச்சர், லாடபுரம் கிராமத்தில் பொக்குனியாற்றின் குறுக்கே ரூ.1 கோடியே 76 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியை அறிவித்தார்.

அறிவிப்பினை தொடர்ந்து 11.09.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் இன்று காலை கலெக்டர் கற்பகம், எம்எல்ஏபிரபாகரன் ஆகியோர் புதிய தடுப்பணை கட்டும் பணிகயை தொடங்கி வைத்தனர்.

இலாடபுரம் கிராமத்தில் உள்ள கோனேரி- பொக்குனியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க படுவதால் மழை நீர் நவீணாவதை தடுப்பதுடன், தடுப்பணை சுற்றியுள்ள பகுதியில் 76 கிணறுகள் நீர் மட்டம் உயர்ந்து மறைமுக ஆயக்கட்டு 315.20 ஏக்கர் விவசாய நிலங்கள்பயனடைவதுடன் குடிநீர் ஆதாரமும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ம.ராஜ்குமார், லாடபுரம் ஊராட்சி தலைவர் சாவித்திரி பெருமாள், கல்பாடி முன்னாள் ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன், நெடுவாசல் எஸ்.ஆர்.டி ராமலிங்கம், லாடபுரம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ராம்ராஜ், லாடபுரம் திமுக கிளை கழக நிர்வாகிகள், நீர்வளத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!