Construction of passenger shelter at Kunnam bus stop at a cost of Rs.40 lakh: Minister Sivashankar has laid the first stone.

தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், குன்னம் பேருந்து நிலையத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் நவீன பயணிகள் நிழற்குடை, பெருமத்தூர் குடிகாடு – சமத்துவபுரம் தார் சாலை ரூ.62.81 லட்சம் மதிப்பீட்டிலும், அத்தியூர் – குடிகாடு தார் சாலை ரூ.45.98 லட்சம் மதிப்பீட்டிலும், அகரம் சீகூர் கருப்பட்டாங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு ரூ.19.00 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடத்திற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து கீழப்பெரம்பலூர் ஊராட்சி வேள்விமங்கலத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். அகரம் சீகூர் பகுதியிலும் பகுதி நேர நியாய விலைக்கடையினை திறந்து வைத்தார். கலெக்டர் வெங்கடபிரியா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டுறவுத் துணைப் பதிவாளர்கள் செல்வராஜ், பாண்டித்துரை, முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, ஊராட்சி மன்ற தலைவர்கள் (குன்னம்) தனலெட்சுமி மதியழகன், (வேப்பூர்) தனம் பெரியசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் உறுப்பினர் கருணாநிதி, ஒன்றிய குழு உறுப்பினர் உமா சந்திரகுமார், குன்னம் வட்டாட்சியர் அனிதா, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அழகு நீலமேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!