Consultation meeting with entrepreneurs to set up small scale textile park: Collector information!

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ஜவுளித் துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்த பட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்த பட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்படவேண்டும். தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் ( பொது உள்கட்டமைப்பு வசதிகள் பொது பயன்பாட்டிற்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ 2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.

தற்போது தொழில் முனைவோரின் கோரிக்கையை தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் ஜவுளி தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைத்து நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும். மேலும், அதிகளவில் அந்நிய செலாவணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

எனவே சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை அனைத்து மாவட்டங்களிலும் பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் வேலைவாய்ப்புகளை பெருக்கவும் அனைத்து தொழில் முனைவோரும் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேற்காண் பொருள் தொடர்பாக ஆலோசிக்கும் பொருட்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் எதிர்வரும் 30.11.2023 அன்று பிற்பகல் 04.30 மணியளவில் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குநர், மண்டல துணை இயக்குநர் அலுவலகம், துணிநூல் துறை, எண். 30/3, நவலடியான் வளாகம் முதல் தளம், தாந்தோணிமலை கரூர்-639 005. தொலைபேசி எண் : 04324- 299 544, 9843212584. என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்:

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!