Consumer awareness camp in Perambalur!
திருச்சி தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு சங்கமும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு கூட்டம் நுகர்வோர் நீதிபதி (பொ), டிராய் மற்றும் சிஏஜி உறுப்பினருமான சிவசங்கர் சேகரன் தலைமையில் நடந்தது.
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் தங்கராஜ் வரவேற்றார். டாக்டர் அன்பழகன் உரையாற்றினார். தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஆர். ராஜாசிதம்பரம், சங்க தலைவர் பெரம்பலூர் மாற்றுதிறனாளிகள் நலசங்கம் செயலாளர் நல்லதம்பி பெரம்பலூர் நுகர்வோர் மற்றும் சமூக நலசங்கம் மார்க்கண்டன், பெரம்பலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் சின்னமுத்து, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சையதுகாசிம், பெரம்பலூர் நுகர்வோர் சங்கம் முத்துராஜ் ஆகியோர் உரையாற்றினர்.
கூட்டத்தில் நுகர்வோர் சங்க கோரிக்கைகள் பெறப்பட்டன. தொலைதொடர்பு சம்மந்தமாக ஒழுங்குமுறை ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்ட விதிமுறைகள், வழிகாட்டுதல் மற்றும் ஆன்லைன் மோசடிகள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் விவசாயம் சம்மந்தமாக விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகளை எடுத்துரைக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு சம்மந்தமாக விழிப்புணர்வு எற்படுத்தப்பட்டது. உணவில் அயோடின் கலந்த உப்பு பற்றியும் பயன்படுத்தாமையால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
செயற்கை செறிவூட்டப்பட்ட மற்றும் பல நிறங்களை கொண்ட உணவு பண்டங்களை பயன்படுத்த கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட பிரச்சார செயலாளர் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் பி.முருகேசன் நன்றி கூறினார்.