Consumer awareness program near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம், மங்கலம் கிராமத்தில், நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி, வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர் பழனியப்பன் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: நுகர்வோர்கள் அனைவரும் விழிப்புடனும் கவனத்துடனும் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தர முத்திரை பார்த்து பொருட்கள் வாங்க வேண்டும் என்றும், வாழ்த்துரை வழங்கிய வழக்கறிஞர் சங்கர் நுகர்வோர்கள் பாதிப்படையும்போது நுகர்வோர் நீதிமன்றத்தில் எவ்வாறு அணுகவேண்டும் என்பது குறித்தும், நுகர்வோர் நீதிமன்றத்தில் இருந்து எவ்வாறான நிவாரணங்கள் பெறலாம் என்பது குறித்தும், தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் எஸ் கே கதிரவன் பேசியபோது, நுகர்வோரின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் கலப்படமற்ற பொருள்களை எப்போ எவ்வாறு தேர்வு செய்வது செய்வது என்பது குறித்தும் எடுத்துரைத்தனர். களப்பணியாளர் பிரியா தொகுத்து வழங்கினார். ஊராட்சித் தலைவர் அம்சவள்ளி நடராஜன் வரவேற்றார். நடராஜன் நன்றி கூறினார், இதில் மகளிர் சுய உதவிக் குழுவினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!