Continuous rain! Public to follow: Perambalur Collector!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வானிலை ஆராய்ச்சி மையம் முன்னறிவிப்பின்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டிருப்பதால், நவ.9 முதல் பெரம்பலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள், அடையாள அட்டை, கல்வி சான்றிதழ்கள். நிலப்பட்டா, பத்திரங்கள் போன்ற முக்கிய ஆவணங்களை நெகிழி பைகளில் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீடுகளின் அருகாமையில் அறுந்த நிலையில் மின்கம்பிகள் இருந்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.. மேலும், உடைகளை உலர்த்த மின்கம்பிகளை உபயோகிக்க கூடாது.

தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் பாதுகாப்பினைக் கருதி அருகில் இருக்கும் நிவாரண மையங்களில் தங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு அலுவலர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். டார்ச் லைட்கள், தீப்பெட்டிகள், மெழுகுவர்த்தி, மருந்துகள் மற்றும் உலர்ந்த உணவு வகைகளை நெகிழி பைகளில் வைத்து எடுத்துச் செல்லும் வகையில் முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் வைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நீர் தேங்கும் பகுதிகளில் கால்நடைகளை கட்டி வைக்காமல், கால்நடைகள் தாங்களாகவே எளிதில் வெளியேறும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மழைக்காலங்களில், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை தனியாக வெளியில் செல்லாமல் தவிர்க்க வேண்டும். ஆறு மற்றும் குளங்களில் குளிக்கச் செல்வதை முழுவதும் தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் மின்கம்பங்களின் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்.

நீரிலோ அல்லது மின்சாரத்திலோ பொதுமக்கள் காயப்பட நேர்ந்தாலும், மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ளதாக பகிரபடும் சந்தேகத்திற்குரிய தகவல்களின் உண்மை தன்மைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக அவசர கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வரும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 04328 1077, 1800 425 4556, என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களையும் மற்றும் 94450 00458, 74026 07785, 93840 56223 என்ற அலைபேசி எண்ணிற்கும் தகவல் தெரிவித்தும், தேவையான தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

வடகிழக்கு பருவமழை மழைக்காலத்தில் பேரிடர் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அவற்றை போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருப்பதாகவும், மக்கள் அச்சபடத் தேவையில்லை எனவும், மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழபை்பு வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!