Control methods of powdery mildew in onion; Perambalur District Horticulture Department Information!

பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 5800 ஹெக்டேரில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவும் குளிர்ச்சியான தட்ப வெட்பநிலை மற்றும் மழையின் காரணமாக வெங்காயத்தில் திருகல் நோய் தாக்கம் காணப்படுகிறது. இந்நோயானது கொலிட்டோடிரைக்கம் பியுசேரியம் மற்றும் ஆந்ரக்னோஸ் போன்ற பல்வகை பூஞ்சைகள் மூலம் தோன்றுகின்றது. இப்பூஞ்சை பாதித்த செடிகளின் தாள்கள் மடிந்து தொங்கும். அடுத்த கட்டமாக வெங்காயத்தின் கழுத்துபகுதி நீண்டு, குமிழ்கள் சிறுத்து காணப்படும். தாக்குதல் தீவிரமானால் செடிகள் அழுகிவிடும்.
இந்நோயானது 50 முதல் 100 விழுக்காடு வரை மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.

பாதிப்பிற்குள்ளான செடிகளை பழைய நிலைக்கு கொண்டுவர இயலாது. ஆனால் மற்ற செடிகளுக்குப் பரவாமல் தடுக்கலாம். இதற்கு இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் பாதிக்கப்பட்ட செடிகளை பாத்திகளாக அமைத்து அதில் 1 கிராம் டெபகோனசோல் 50 % + ட்ரிப்லோக்சைட்ரபின் 25 % பூஞ்சான் கொல்லி 1 லிட்டர் நீரில் ஊற்றி கலந்து பாதிக்கப்பட்ட இடத்திற்கு தகுந்தாற்போல் தண்ணீர் மற்றும் மருந்தை அதிகப்படுத்தவும். ஒரு லிட்டர் நீருக்கு கார்பெண்டசிம் பூஞ்சாணக்கொல்லி 1 கிராம் என்ற அளவில் கலந்து செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். மாற்றாக புரோபிகோனசோல் 25 ஈசி அல்லது ஹெக்சகோனசோல் 5 ஈசி இவற்றுள் ஏதேனும் ஒரு பூஞ்சாணக்கொல்லியை ஏக்கருக்கு 200 மி.லி வீதம் இலைவழியாகத் தெளிக்கலாம். பத்து நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

இப்பூஞ்சையானது நிலத்தில் பல ஆண்டுகள் வளரும் தன்மை பெற்றது. எனவே பாதிக்கப்பட்ட செடிகளை நிலத்தில் விட்டு வைக்காமல் அகற்றி எhpத்துவிட வேண்டும். இது மண் மூலம் பரவக்கூடிய நோய் என்பதால் பயிh; சுழற்சி முறையைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

நன்மை செய்யும் பூஞ்சையான டிரைக்கோடொமா ஹார்சியானம் எனும் உயிரியல் கட்டுப்பாடு காரணியை 1 கிலோ எடுத்து 25 கிலோ மக்கிய எருவில் கலந்து 1 ஏக்கர; நிலத்தில் இடுவதன் மூலம் கொலிட்டோடிரைக்கம் பூஞ்சையின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். மேலும், வெங்காயத்தை நடுவதற்கு முன்பு 5 கி டிரைக்கோடொ;மா ஹாh;சியானம் ஒரு கிலோ வெங்காயத்தில் விதை நேர;த்தி செய்வதன் மூலம் இந்நோயினை கட்டுப்படுத்தலாம்.

விவசாயிகள் டிரைக்கோடொமா ஹார்சியானம் என்னும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணியை பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில் பெற்று பயன்படுத்தி திருகல் நோயினை கட்டுப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கூறப்பட்டுள்ள முறையினை விவசாயிகள் கடைபிடித்து வெங்காயத்தில் வரும் திருகல் நோயை மேலும் பரவாமல் கட்டுப்படுத்திட பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை இயக்குனர் சரண்யா விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!