Controversial Opinion on Periyar Statue: Protest Demonstration against of H. Raja
பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஹெச்.ராஜாவை கண்டித்து பெரம்பலூரில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கொடும்பாவி கொளுத்தினர்.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றி உடைக்கப்பட்டதற்கும், பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஹெச்.ராஜாவை கண்டித்தும், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை தி.க., கம்யூனிஸ்டுகள், வி.சி.க சிறுத்தைகள் மற்றும் திமுக வினர் இன்று ஒன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேரணி வந்தக திமுகவினர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தின் முன் பகுதியில் ஹெச்.ராஜாவிற்கு எதிராக கோஷமிட்டனர், பின்னர், ஹெச்.ராஜாவின் உருவப்படத்தை காலணிகளால் தாக்கி கோசமிட்டனர்.
புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக பிரமுகர்கள், மாவட்ட செயலாளர் குன்னம்.சி.ராஜேந்திரன், முன்னாள் பெரம்பலூர் எம்.எல்.ஏ ராஜ்குமார், வழக்கறிஞர் ராஜேந்திரன், வாலிகண்டபுரம் ரவிச்சந்திரன், டாக்டர் வல்லபன், பெரியம்மாபாளையம் ரமேஷ், பெரம்பலூர் நகர செயலாளர் பிரபாகரன், முன்னாள் கவுன்சிலர் கனகராஜ், மாவட்ட மகளிரணி மகாதேவிஜெயபால், பொருளாளர் டி.சி.பி பாலு, மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்தனர். பின்னர் ஹெச்.ராஜாவின் படத்திற்கு தீ வைத்து கொளுத்தினர்.