Cooperative workers who have sold a large number of gifts for amma salt
பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மா உப்பு அதிக அதிகளவில் விற்பனை செய்த கூட்டுறவு பணியாளர்களுக்கு பரிசு வழங்கப்ப்டடது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடைகளில் 2015-2016 ஆம் ஆண்டு அம்மா உப்பு அதிகளவில் விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் த.உதயசந்திரன் உத்தரவின் பேரில் பரிசுத் தொகையும் பாராட்டு சான்றிதழும் மூன்று பேருக்கு வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல் பரிசாக வி.ஆர்.எஸ்.எஸ்.புரம்., தொடக்க வேளாண்மை கூட்டுற சங்க விற்பணையாளர் டி.கருப்பையாவிற்கு ரூ 2500 ம், நக்கசேலம் சங்க விற்பனையாளர் எஸ்.செல்வத்திற்கு இரண்டாம் பரிசாக 1500 ம், நெய்குப்பை சங்க விற்பனையாளர் எஸ்.நற்பிணைக்கு மூன்றாம் பரிசாக ரூ 1000 மற்றும் பாராட்டு சான்றிதழை மண்டல இணைப் பதிவாளர் சிவ.முத்துக்குமாரசாமி வழங்கினார். அப்போது பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர் ஆர்.கிருஷ்ணசாமி, மண்டல இணைப்பதிவளார், அலுவலக கண்காணிப்பளார் ப. சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.