Copy of the new law on the Lawyers struggle combustion at perambalur today


பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் புதிய சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்தினர்

court-perambalur

பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் புதிய சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விதிமுறைகளை மீறும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு, இரயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றவளாக நுழைவு வாயில் பகுதியில் பெரம்பலூர் மாவட்ட பார் அசோஷேசியன் வழக்கறிஞர்கள் மாவட்ட தலைவர் வள்ளுவன்நம்பி தலைமையிலும், அட்வகேட் அசோஷேசியன் வழக்கறிஞர்கள் மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமையிலும் தனித்தனியாக நேற்று புதிய சட்ட திருத்த நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள இரண்டு வக்கீல்கள் சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்ப்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு, புதிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி புதிய சட்ட திருத்த நகலை தீ வைத்து எரித்து, தரையில் போட்டு தங்களதுஎதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் புதிய சட்ட திருத்தம் வழக்கறிஞர்களின் சுதந்திரத்தையும், உரிமையையும், தொழிலையும் பாதிக்கும் வகையில் உள்ளதாகவும் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், தவறும் பட்ஷத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் பார் அசோஷேசியன் சங்கத்தின் செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் சீனிவாசன், இணைச்செயலாளர் இளங்கோவன், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணமூர்த்தி, நிர்வாக்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, அண்ணாதுரை, பெரியசாமியும், அட்வகேட் அசோஷேசியன் சங்கத்தின் செயலாளர் அருணன், பொருளாளர் செந்தாமரைக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கருணாநிதி, அருள், முத்துசாமி, தங்கதுரை, அழகேசன், துரை மற்றும் வழக்கறிஞர் செந்தில்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!