Corona 2nd wave; Panguni Uttara Thiruvazha: Walk with guiding principles; Perambalur Collector Notice

Photo Credit : Perambalur.nic.in

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்ற பங்குனி உத்திர தேர் திருவிழா வரும் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த நிலையில் பங்குனி உத்திர திருத் தேரோட்ட விழா தற்சமயம் உருமாறிய கொரானாவும், பழைய கொரானா வைரஸின் இரண்டாவது அலை கணிசமாக உயர்ந்து வருவதாலும், பெரம்பலூர் மாவட்டத்தில் தற்சமயம் கொரானா நோய் தொற்று கண்டறியப்பட்டு வருவதாலும், கொரோனா நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்திட வேண்டிய நடவடிக்கை மேற்கொள்ளவ உள்ளதாலும், அரசு பாதுகாப்பு வழிகாட்டும் நெறிமுறைகளை கடைபிடித்து திருவிழா நடத்தப்படவுள்ளது.

மேலும், இந்த ஆண்டு 20.03.2021 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி 27.03.2021 முடிய நடைபெறவிருந்த சுவாமி திருவீதி உலா மற்றும் 28.03.2021 மற்றும் 29.03.2021 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த திருத் தேர்விழா நிகழ்வுகள் நடைபெறாது. திருவிழாவிற்கான அனைத்து நடைமுறைகளும் ஆகம விதி மீறாமல் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி திருக்கோவிலின் உள்வளாகத்திலேயே (மலைக்கோவில்) பங்குனி உத்திர பெருந்திருவிழா நடைபெறும்.

கோவிலுக்கு அனைத்து நாட்களிலும் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளி பின்பற்றியும், அரசு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!