Corona Infection Confirmed For 9 People Including Perambalur collector office Employee: Disinfectant Spray!

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித் துறை தேர்தல் பிரிவில் பணிபுரிந்து வரும் பணியாளர் உட்பட 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதனைத்தொடர்ந்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுன் நேரடி தொடர்பில் இருந்த அனைவரிடமும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் ரோவர் ஆர்ச் பகுதியில் உள்ள அவரது வீடு உட்பட பாதிக்கப்பட்டர்கள் வசிக்கும் பகுதி முழுவதும் கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யும் பணியில் நகராட்சி மற்றும் ஊராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 200 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிற நிலையில் தற்போது மேலும் 9 பேர் பாதிக்கப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை 209 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 168 பேர் சிகிச்சைக்குப் பின் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மொத்தம் 40 பேர் சிகிச்சையில் உள்ளனர். எனவே சளி, காய்ச்சல், இருமல், உடல் சோர்வு உள்ளிட்ட ஏதாவது அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது சுகாதார நிலையத்தை அணுகி பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதே போல், வாலிகண்டபுரம், மங்கலமேடு, நூத்தப்பூர் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பபட்டு தீவிர சிகிச்சை மற்றும் பாதுகாப்பு ஏற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!