Corona infection; employee hospitalization of private tyre factory near Perambalur

பெரம்பலூர் மாவட்டம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விஜயகோபலபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் டயர் தொழிற்சாலையில், டிசிசி பிளான்ட்டில் பயாஸ் பிரிவில் பயிற்சி தொழிலாளியாக பணியாற்றி வந்த திருச்சி சேர்ந்த 25 வயது மதிக்கதக்க பணியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், பாதிக்கப்பட்ட அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று, திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் இருமல், சளி, காய்ச்சல் அறிகுறி உள்ள 20க்கும் மேற்பட்டோரை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து வீட்டில் தனிமை இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

மூன்று ஷிப்ட்டுகளாக அந்த டயர் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களின் பாதுகாப்பை பற்றி கவலை கொள்ளாமல் நிர்வாகம் தொடர்ந்து டயர் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக தொழிலாளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்ததோடு, கொரோனா அச்சத்தால் 40% சதிவீதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாத சூழலில், நிர்வாகத்தின் நிர்ப்பந்தத்தால் 60% சதவீத தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள், அந்த தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!