Corona infection on the rise in villages: Kandavarkottai MLA petitions Perambalur Collector for immediate action

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரம்பலூர் – அரியலூர் மாவட்டக் குழு சார்பில் மாநிலக் குழு உறுப்பினரும் கந்தவர்க்கோட்டை எம்.எல்.ஏவுமான எம்.சின்னதுரை தலைமையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்:

கொரோனா நோய்த் தொற்று பரவல் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருப்பதாக தமிழக் முதல்வர் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். இதில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. அதிலும் நகரங்களை கடந்து அனைத்து கிராமங்களிலும் பரவல் அதிகரித்துள்ளது. எனவே, கிராமங்கள் தோறும் பரிசோதனையும் தடுப்பூசி செலுத்துவதையும் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும், இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் தன்னார்வலா;கள் கொண்ட குழுக்களை அமைக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகள் மற்றும் உதவியாக வருபவர்களுக்கு படுக்கை வசதிகள் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யவேண்டும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை வசிக்கும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய கொரோனா நோய் சிகிச்சையளிக்க அடிப்படை வசதிகள் ஆக்சிஜன் படுக்கைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் இல்லாத நிலையே உள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பெரம்பலூh; மாவட்டத்திலுள்ள குன்னம், வேப்பூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை உள்ளிட்ட பல்வெறு பகுதிகளில் உள்ள அரசு கல்லூரிகள், தனியார் பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் மருத்துவ கட்டமைப்பு மற்றும் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் மூலம் சிகிச்சையளித்தால் தான் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும் அதோடு சித்தமருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களுடன் தனிமைபடுத்தக் கூடிய அறைகளை ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்.

தாலுகா மருத்துவமனைகளில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான வசதி இல்லாததால் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் 200 க்கும் மேற்பட்ட பரிந்துரை செய்து அனுப்பப்படுவதால் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். அப்படி வரும்போது ஓபி சீட்டுக்கு ஒரு மணிநேரம், சிடி ஸ்கேனுக்கு மூன்று மணிநேரம், காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. அப்போது சமூக இடைவெளியின்றி நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. போதுமான ஊழியர்களைக் கொண்டு தாமதமில்லாமல் ஓபி சீட்டு மற்றும் சிடி ஸ்கேன் எடுத்து தாமதமில்லாமல் ஸ்கேன் ரிப்போட் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சிக்சசை முடிந்து வீட்டுக்கு செல்லும் நோயாளிகள் போக்குவரத்து வசதியின்று தவிப்பதால் உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டந்தோறும் கொரோனா உதவி மையம் அமைத்து செயல்பட உள்ளோம், இதற்கு அனுமதி அளித்து உதவிட வேண்டும். மேலும் கிராமப்புறங்களில் ஒரே குடும்பத்தில் இரண்டு மூன்று பேருக்கு தொற்று ஏற்படும் பட்சத்தில் அவர்களை தனிமைப்படுத்த போதிய இடவசதி இல்லை என்பதால், ஊராட்சி ஒன்றிய அளவில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

தற்போது கொரோனா தொற்று தொடச்சியாக கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவரை உடனடியாக நியமிக்க வேண்டும். நகராட்சி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், கூட்டுறவு அங்காடி விற்பனையாளர்கள் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் ஆகியோருக்கு முன்களப்பணியாளர்களுக்கான சலுகைகளை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவில் தெரிவித்து இருந்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ரமேஷ், எஸ்.அகஸ்டின், எ.கலையரசி, எஸ்.பி.டி.ராஜாங்கம், மற்றும் நிர்வாகிகள் சி.சண்முகம், எம்.கருணாநிதி, ஆர்.ரெங்கநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!