Corona kills today in Perambalur district

Corona kills today in Perambalur district
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 54) சித்த மருத்துவரான இவருக்கு, வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருடன் நேரடித் தொடர்பில் இருந்த அவரது 46 வயது மனைவி, 27 வயதுடைய மகள் உள்ளிட்ட 3 பேர் திருச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் சிகிச்சை பெற்று வந்த சித்த மருத்துவர் செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 171 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 156 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி இருக்கின்றனர். சென்னை மற்றும் திருச்சியில் தலா ஒருவரும், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் 13 பேரும் சிகிச்சை பெற்று வரும் வேளையில் கொரோனாவால் பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழ்ந்த முதல் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் சுகாதார துறையினர் தீவிர நோய் தடுப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.