Corona prevention action; Penalties for individuals and companies violating the rules – Perambalur Collector V. Chanda Announcement!

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:

பொது சுகாதார சட்டம் 1939 கொரோனா தடுப்பு பணிக்காக, அபராதம் விதித்தல் (Compounding offence) நடைமுறைபடுத்துதல் தொடர்பான அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை அனைவரும் பின்பற்றவேண்டும் என்றும், தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கொரோனா தடுப்பு பணிக்காக தமிழ்நாடு அரசு ஆணை எண் 326-ன்படி ஊரடங்கு தளர்வு நிபந்தனைகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கும் ஆணை நடைமுறைபடுத்தப்படும்.

அதன்படி, தனிமைபடுத்துதல் விதிகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.500-ம், வாய் மற்றும் மூக்கு மறைக்கும்படி முகக்கவசம் அணியாதவா;களுக்கு ரூ.200-ம், பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்களுக்கு ரூ.500-ம், சமூக இடைவெளி நடைமுறையை கடைபிடிக்காமல் இருக்கும் நபர்களுக்கு ரூ.500-ம், முடிதிருத்தும் நிலையம், அழகு நிலையம், உடற்பயிற்சி கூடம், வணிக வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் நிலையான செயல்முறைகளான (standard Operating Procedure) விதிகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.5,000-ம், நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் விதிகளை மீறும் தனிநபர் மீது ரூ.500-ம், நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் விதிகளை மீறும் வாகனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.5,000-ம் அபராதத் தொகை விதிக்கப்பட உள்ளது. இந்த பணியினை காவல் துறை, வருவாய்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்ந்த அலுவலர்கள் இன்று முதல் நடைமுறைபடுத்த உள்ளனர்.

எனவே, பொதுமக்கள் மற்றும் வணிகள் நிறுவனங்கள் ஊரடங்கு தளர்வு விதிமுறைகளில் உள்ளது போன்று கட்டாயம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (SOP) கடைபிடித்து கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசிற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும், என்றும், மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறும் தனிநபர் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது இன்று முதல் அபராதம் விதிக்கப்படும் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!