Corona prevention equipment for 4 thousand government school students; DATO. S. PRAKADEESH KUMAR MD., PLUS MAX Group of Companies

பூலாம்பாடி | Poolambadi

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை சேர்ந்தவர் டத்தோ எஸ். பிரகதீஸ்குமார் ( DATO. S. PRAKADEESH KUMAR MD., PLUS MAX Group of Companies). இவர், இந்தியா மற்றும் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, துபாய், ஹாங்காங் மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் 30 க்கும் மேற்பபட்ட இடங்களில் பிளஸ் மேக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.

பிளஸ் மேக்ஸ் நிறுவனமான பிளஸ் மேக்ஸ் எண்ணெய் மற்றும் எரிவாயு, Brewery and Duty Free Shops, ரிசார்ட், சரக்கு போக்குவரத்து, கட்டுமானம் என பல்வேறு
துறைகளில் தடம்பதித்துள்ளார். இதனால், இவரை பாராட்டி மலேசிய அரசாங்கம் “டத்தோ” எனும் உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இவ்வாறு அயல்நாடுகளில் வெற்றிகரமான தொழிலதிபராக இருக்கும் டத்தோ எஸ் பிரகதீஸ்குமார், தன்னுடைய சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டத்தில் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

பூலாம்பாடியில் சாலை அமைக்க ரூ. 28 லட்சம் நிதி வழங்கியது, தடுப்பணை கட்ட ரூ 20 லட்சம் நிதி வழங்கியது, பூலாம்பாடி பால் கூட்டுறவு சொசைட்டிக்கு தன்னுடைய சொந்த பணத்தில் 5 சென்ட் நிலம் வாங்கி கொடுத்தது மற்றும் அங்குள்ள நூலகத்திற்கு ரூ. 1 லட்சம் நன்கொடையாக வழங்கியது என பல்வேறு நல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறாh;. மேலும் கஜாபுயல் மற்றும் பல்வேறு இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிளஸ் மேக்ஸ் நிறுவனத்தின் மூலம் நிவாரணப்
பொருட்களை வழங்கியுள்ளார். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் சிக்கி கொண்டு மலேசியா செல்ல முடியாமல் தவித்த தமிழா;களை ரூ. 45 லட்சம் செலவில் தனிவிமானம் ஏற்பாடு செய்து மலேசியா செல்ல உதவியுள்ளார்.

அதே போல் தான் படித்த பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்களை பெறும் மாணவிகளுக்கு ஆத்தூர் அருகே உள்ள தன்னுடைய கல்வி நிறுவனங்களில் ஒன்றான பாரதியார் மகளிர் கல்லூரியில் இலவச கல்வி அளித்து வருகிறார். அதன்படி 10 மாணவிகள் இலவசமாக பட்டப்படிப்பு பயின்று வருகின்றனர்.

அதே போல் கடந்த வருடம் கொரோனா தாக்கம் தொடங்கியபோது ரூ. 3 லட்சம் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரணங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கினார்.
இந்த நிலையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளதால் தற்போது பள்ளி செல்லும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு பொருட்களை தன் சொந்த செலவில் வாங்கித்தர திட்டமிட்டு, இதனை பூலாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் 55 பேருக்கு ப்ளஸ் மேக்ஸ் நிறுவனம் சார்பில் இதன் மேலாண் இயக்குனர் டத்தோ எஸ். பிரகதீஸ்குமார் முகக்கவசம், கிருமிநாசினி மற்றும் சோப்பு உள்ளிட்டவைகளை பளஸ் மேக்ஸ் சார்பில் தொடங்கி வைத்தார். தலைமையாசிரியர் சேகர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மோகன்ராஜ், VIP குழுமம் ராஜா,பாவேந்தர் கல்லூரி விஜயகுமார்,பாரதிதாசன் கல்லூரி ராஜு, உள்ளிட்டோர் இந்த நிகச்சியில் கலந்து கொண்டனர். பின்னர், மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பளஸ் மேக்ஸ் சார்பில், டத்தோ பிரகதீஸ்குமாரின் தந்தை சூரியபிரகாசம் ஒப்படைத்தார்.

இது தொடர்பாக பிளஸ் மேக்ஸ் நிறுவனத்தின் குரூப் மேனேஜிங் டைரக்ட்டர் டத்தோ எஸ் பிரகதீஸ்குமார் தெரிவித்ததாவது:
“தான் பிறந்த ஊருக்கும், மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து தர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தனது பல்வேறு நிறுவனங்களில் தமிழர்களுக்கு பணிவாய்ப்பு வழங்கியுள்ளதாகவும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் கூடுதல் வசதிகளும் செய்துதர தாம் முனைவதாகவும் தெரிவித்தார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!