Corona relief fund abuse Beneficiaries petition in Perambalur

கொரோனா நிவாரண நிதி வழங்கியதில் நலவாரியத்தில் முறைகேடு! பயனாளிகளின் விபரங்களை வெளியிடக் கோரி பெரம்பலூர் கலெக்டரிடம் இந்திய தொழிற் சங்க மையம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வே.சாந்தாவிடம், பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட இந்திய தொழிற் சங்க மையம் சார்பில் மாவட்டத் தலைவர் எஸ்.அகஸ்டின் தலைமையில் கொடுக்கப்பட்ட மனு:

பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அறிவித்துள்ள அறிக்கையில் ரூ.5 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது, என்றும் வங்கி கணக்கு இல்லாதோருக்கு நேரடியாகவும் நிவாரண நிதியாக தலா ரூ.2000 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் 98% முடிந்துள்ளதாக அறிவித்துள்ளார். மேற்கண்ட அறிவிப்பு தவறானது என்பதுடன் நிவாரண நிதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகம் எழுகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

நிவாரண நிதி பயனாளிகளின் விபரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 2% கொடுக்காத விபரங்களையும் தெளிவுப்படுத்த வேண்டும். நிவாரண நிதி 10% மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில் 98% கொடுக்கப்பட்டுள்ளது என்பது கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், உடலுழைப்பு நலவாரிய உறுப்பினர்கள் மத்தியில் கொந்தலிப்பை எற்படுத்தியுள்ளது. பார்வையில் கண்டுள்ள எங்களது சங்கத்தின் கோரிக்கைகள் படி நிவாரண நிதி வழங்கிட கேட்டுக்கொள்கிறோம். எனவே உரிய விசாரணை செய்து நிவாரண நிதி கிடைத்திட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் ஊரடங்கு ஜூன் 30 வரைஅறிவிக்கப்பட்டுள்ளதால் கொரானா நிவாரன நிதியாக அனைத்து முரைசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7500/- மற்றும் இலவச ரேசன் பொருட்களை 6 மாதங்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் வேலை வாய்ப்பை அனைவருக்கும் விரிவுப்படுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அஞ்சலக துறை மூலம் செலுத்தப்பட்ட தொகை ரூ.2000/-ல் ரூ.1000/- மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. வங்கியில் பல தொழிலாளர்களுக்கு எண் மாற்றி அனுப்பப்பட்டுள்ளதாக அலைக்கழிக்கப்படுகிறது எனவே இதுபோன்ற பிரச்சனைகளை கலைந்திட நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம். சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரண நிதி ரூ.1000/- மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உணவு பொருட்கள் வழங்கிட கேட்டுக்கொள்கிறோம்.

அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கொரானா கட்டுப்பாடுகளை பயணிகளிடம் நடைமுறைப்படுத்த முயன்றும் முடியாத நிலையில் பயணிகளுக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கும் இடையே மோதல் ஏற்ப்படும் சூழ்நிலையில் கொரானா தொற்று பரவல் இல்லாத பேருந்து இயக்கத்திற்கும் போக்குவரத்து கழக ஊழியர்கலின் உயிர் பாதுக்காப்பிற்கு உறுதி அளித்திட உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறோம்.

ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு லைசன்ஸ் புதுப்பிக்கப்படவில்லை என்று பணி மறுக்கப்படுகின்றது. கொரானா தொற்று நோய் அபாயத்தில் தனி மனித இடைவெளி இல்லாமல் அதிகப்படியான பயணிகளை ஏற்ற பெரம்பலூர் போக்குவரத்து நிர்வாகத்தால் கட்டாயப்படுத்தபடும் நடவடிக்கையை கைவிட தலையிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்தனர். அப்போது அந்த சங்கத்தை சேர்ந்த பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!