Corona Relief to be delivered token house for essential items – Perambalur Collector
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வே.சாந்தா விடுதுள்ள தகவல்:
பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழக அரசின் அறிவிப்பின்படி, கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.1000- ரொக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதற்காக, குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி கூட்டுறவுத் துறை விற்பனையாளர்களால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களது வீட்டிற்கே வந்து டோக்கன் வழங்கப்படும்.
நியாயவிலைக் கடையில் 02.04.2020 முதல் நாளொன்றுக்கு 100 டோக்கன்களுக்கு மட்டுமே ரொக்கம் ரூ.1000- மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதால் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அந்தந்த நாளுக்குரிய குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே நியாயவிலைக் கடைக்கு வருகைபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
டோக்கன்படி ரொக்கமும் பொருட்களும் வழங்கப்படுவதால் மற்ற குடும்ப அட்டைதாரர்கள் தங்களது டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் மட்டுமே அங்காடிக்கு வருகை தர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கொரோனா தொற்று அபாயம் உள்ளதால் குடும்ப அட்டைதாரர்கள் டோக்கன் தேதியில் மட்டும் நிவாரணத் தொகை பெற வர வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.