Corona: Security procedures should be properly followed by the public: Perambalur Collector V. shanta

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பெரம்பலூர் நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் வீடு வீடாக சென்று கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரசுரம் மற்றும் கபசுர குடிநீர் வழங்குதல், கிருமி நாசினி மருந்து தெளித்தல், தூய்மை பணி மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொது மக்கள் கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றி கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா நோய் அறிகுறியான தொண்டையில் வலி, காய்ச்சல், சளி, மூச்சு விடுவதில் சிரமம், தசை வலி, தலை வலி, சுவையின்மை, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.

இம்மாவட்டத்தில் உள்ள நீரிழிவு நோய், உயா; இரத்த அழுத்தம், இருதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய், நாற்பட்ட நுரையீரல் பாதிப்பு, வலிப்பு நோய், மணநோய் பாதிப்பு, கர்பிணி தாய்மார்கள், பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கவும், நோய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான மாத்திரைகளை நேரடியாக வீடுகளுக்கு சென்று பெண் சுகாதார தன்னார்வ பணியார்கள் (WHV) மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

வெளி நாடு, வெளி மாநிலம் மற்றும் குறிப்பாக சென்னையில் இருந்து வரும் நபர்கள் தீவிர கண்காணிப்பு செய்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்து தினமும் மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்படுகிறார்கள்.

பொது மக்கள் தினந்தோறும் 10 முதல் 15 முறை கை கழுவுதல் வேண்டும். வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைகள் மற்றும் தெருக்களுக்கு சென்றாலும் கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும். 6 அடி சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். தற்போது மழைக் காலம் என்பதால் சாதாரண காய்ச்சல் சளி என்று அலட்சியம் காட்டாமல் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பொது மக்களுக்கு கொரோனா நோய் தொற்று பற்றி எதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!