Corona vaccination from tomorrow for election workers in Perambalur district

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் 26.02.2021 முதல் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வருகிற 06.04.2021 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்திட இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி 14.01.2021 அன்று பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு, முதற்கட்டமாக சுகாதாரத் துறையைச் சேர்ந்த அலுவலர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 2,634 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 04.02.2021 முதல் கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதனடிப்படையில் 1,178 முன் கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 60 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு கோவிட்-19 செலுத்தும் பணியில் 157 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 36 துறைகளைச் சேர்ந்த 4,323 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளன. இதற்காக வருகின்ற 04.03.2021, 05.03.2021, 06.03.2021 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் உதவியாளர் அடங்கிய மருத்துவக் குழு மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

காலை 10.00 மணி முதல் 05.00 மணி வரை பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை அம்மாபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, வேப்பந்தட்டை வட்டார வள மையம், வாலிகண்டபுரம் அரசு சுகாதார மையம், நெற்குணம் அரசு மேல்நிலைப் பள்ளி, செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி, பாடலூh; அரசு மேல்நிலைப் பள்ளி, குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, லப்பைக்குடிக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மதியம் 02.00 மணி முதல் 05.00 மணி வரை சிறுவாச்சூர்அரசு மேல்நிலைப் பள்ளியிலும், அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளி, வி.களத்தூர் ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலைப் பள்ளி, நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளி, கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி, வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி, துங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

எனவே, தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொண்டு, கோவிட்-19 நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மேலும், சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து தங்கள் சுற்றத்தார்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலரும், டி.ஆர்.ஓவுமான மாவட்ட வருவாய் அலுவலர் செ.ராஜேந்திரன், குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.சங்கா;, முதன்மை கல்வி அலுவலர் க.மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!