Corona vaccination in Kunnam: District Chairman Rajendran started for 18 -44 year olds.
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். எஸ்.சிவசங்கர் ஆலோசனைக்கிணங்க 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா நோய் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாம் குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரும், திமுக மாவட்ட செயலாளருமான குன்னம் சி. இராஜேந்திரன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். வேப்பூர் ஒன்றிய சேர்மன் பிரபாசெல்லப்பிள்ளை, வேப்பூர் பி.டி.ஓ. மரியதாஸ் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள், மருத்துவர்கள், குன்னம் ஊராட்சி தலைவர் மதியழகன், கிளைச் செயலாளர் ராமமூர்த்தி, ஜெ.சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.