Corona virus Prevent: 533 beds including amenities ready: Perambalur Collector

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் 144 தடை உத்தரவு தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் வே.சாந்தா உடன் நடைபெற்றது. அப்போது அவர் தெரிவித்ததாவது:

தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி பெரம்பலூர் மாவட்ட மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, வருகின்றன. அதனடிப்படையில் பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, கிருமி நாசினிகள் தெளித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் சோப்பு போட்டு கைகளை கழுவுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக முதலமைச்சரின் ஆணையின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாலை 6.00 மணி முதல் 144 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது, அதன்படி பெரம்பலூர் மாவட்ட எல்லைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அரசு பணி நிமித்தம் செல்லும் வாகனங்களை தவிர பிற வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது.

மார்ச் 1-ம் தேதிக்கு பிறகு வெளிநாட்டிலிருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவர்களால், அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்களது இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற ஒட்டுவில்லையும் சுகாதாரத்துறையின் மூலமாக ஒட்டப்பட்டுள்ளது.

கிராமங்களில் மார்ச் 1-க்குப் பிறகு சொந்த ஊருக்கு வருகை புரிந்திருந்தால் அவர்களாகவே தங்களை பற்றிய தகவல்களை சுகாதாரத் துறையினரிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வருகை புரிந்த 166 நபர்கள் வெளிமாநிலங்களிலிருந்து வருகை புரிந்த 140 நபர்கள் அவர்களது இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் மருத்துவத்துறையினரின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அவசரத் தேவைக்காக கொரோனா வைரஸ் அறிகுறி தென்படும் நபர்களின் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை, 4 வட்டார மருத்துவமனைகள் மற்றும் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மொத்தமாக 533 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தயார் நிலையில் 10 நடமாடும் மருத்துவ வாகனங்களும், 4 தாய்சேய் நல மருத்துவ வாகனங்களும் அவசரகால 108 வாகனங்கள் 13 ம், இப்பணிகளுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதில் இரண்டு 108 அவசர கால வாகனங்களில் கொரோனா சிகிச்சைக்கென பிரத்யேக வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணி தாய்மார்களை தொடர் சிகிச்சை மற்றும் குழந்தைப்பேறுக்கென அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல 108 மற்றும் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொடர்பாக அரசு எடுத்து வரும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தடுப்பு பணி என்பது சமூகத்தின் பொறுப்பாகும். எனவே பொதுமக்கள் அனைவரும் 144 தடை உத்தரவு காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியே வரவேண்டும். எனவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் போலீஸ் எஸ்.பி நிஷா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், இணை இயக்குநர் மரு.திருமால், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கீதாராணி, நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!