Corona virus prevention measures: Perambalur city completely stayed in the houses; Normal life in villages unaffected!
பாரத பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கின் பேரில், கரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மக்கள் தனிமையாக வீடுகளில் இருப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்பதால் இன்று காலை முதல் இரவு 9 மணி வரை இருக்க அறிவுறுத்தினார். அதன் பேரில், இன்று பெரம்பலூர் நகர மக்கள் தொடர்புகளை துண்டிக்கும்வ விதமாக வீடுகளில் தங்கினர்.
இதனால், வழக்கம் பரபரப்பாக காணப்படும் தினசரி காய்கறி சந்தை, உழவர் சந்தை, புதிய, பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை மற்றும் பாலக்கரை பகுதிகளில் ஆட்கள் நடமாட்டமின்றி அமைதி நிலவியது. கோனேரிப்பாளையம் புறவழிச்சாலை, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை, பெரம்பலூர் – துறையூர், பெரம்பலூர் – ஆத்தூர், பெரம்பலூர் – அரியலூர் சாலைகள் வாகன ஓட்மின்றி வெறிச்சோடின.

மக்கள் சுய ஊரடங்கை பற்றி கவலையின்றி பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் வழக்கம் போல்செயல்பட்ட கறிகடைகள்
பெரும்பாலான மக்கள் இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், அரும்பாவூர் உள்ளிட்ட பல ஊர்களில், மீன், கோழி, ஆடு, மாடு இறைச்சிகளை எடுத்து வந்து விதமாக சமைத்து உண்டனர். மேலும், தள்ளுவண்டி கடைகள் முதல் நட்சத்திர ஹோட்டல்கள் வரை மூடப்பட்டிருந்தது பால், பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள், மருந்து கடைகள் திறந்து இருந்தன. மற்ற அனைத்து கடைகள் அலுவலங்களும் மூடப்பட்டிருந்தன. பொதுமக்கள் வைரஸ் தாக்குதல் இருந்து தப்பிக்க வழிகளில் சென்ற வாகன ஓட்டிகள் முகமூடி அணிந்து சென்றனர்.
கிராமங்களில் உள்ளி கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் வீடுகளில் தங்கியவர்கள் போக மீதமிருந்தவர்கள் தீவிர விவசாய பணிகள் மேற்கொண்டனர்.
மேலும், கிராமங்களில் வாசலில் மஞ்சள் தெளித்து வேப்பிலை சொருகிய கும்பம் வைத்து வைரஸ் விரட்டும் என்ற நம்பிக்கையில் வைத்திருந்தனர்.
போலீசார் நகரத்தில் முக்கிய பகுதிகளில் இருந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.