Cotton root rot disease control in the Perambalur agriculture sector consultancy

பெரம்பலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுதர்சன் விடுத்துள்ள செய்தி குறிப்பு :

பெரம்பலூர் மாவட்டத்தில் 2017 செப்டம்பர் மாதம் வரை பெய்ய வேண்டிய மழையளவான 395 மிமீ -ல் தற்சமயம் வரை 538.4 மிமீ மழை பெய்துள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடப்பு பருவத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்சமயம் 24,500 ஹெக்டேர் நிலப்பரப்பில் பருத்தி பயிரிடப்பட்டு, 30-35 நாள் பயிராக உள்ளது. தற்பொழுது பெய்து வரும் தொடர் மழையினால் மண்ணில் ஈரப்பதம் அதிகளவில் உள்ளது. இந்த சீதோஷ்ன நிலையில் மண்ணின் வெப்பநிலை 20 முதல் 30 டிகிரி ஆக இருக்கும். இந்த சூழ்நிலை பருத்தியில் வேரழுகல் நோய் தாக்குவதற்கு உகந்ததாகும்.

மேலும், அங்கக உரங்கள் இடாத வயல்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும். பாதிக்கப்பட்ட பருத்தி செடிகளில் முளையிடும் நாற்றுக்களின், விதையிலை கீழ்த்தண்டில் கருப்பு புண்கள், தண்டின் பட்டை இடை நீக்கமடைந்து நாற்றுகள் இறந்துவிடும். தண்டின் அடிப்பகுதியில் பட்டை நார் நாராக உரிந்து, வேர்பகுதி முழுவதும் சிதைந்து விடும்.

செடியை பிடுங்கினால் எளிதில் வந்துவிடும். இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் விவசாயிகள் தங்கள் வயல்களில் மழைநீர் தேங்காதவாறு நல்ல வடிகால் வசதிகளை ஏற்ப்படுத்திட வேண்டும்.

மேலும், இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 2.5 கிலோ டிரைகோடெர்மாவிரிடியை 50 கிலோ அங்கக உரத்துடன் கலந்து வயலில் மண்ணின் மேற்பரப்பில் இட வேண்டும் அல்லது கார்பன்டசிம் 15 கிராமை 10 லிட்டர் தண்ணீரில் அல்லது காப்பர் ஆக்சிகுளோரைடு 20-25 கிராமை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட பருத்தி செடியின் வேர்ப்பகுதி நனையும்படி ஊற்ற வேண்டும். மேலும் அருகில் உள்ள செடிகளுக்கும் வேர்பகுதி நனையும்படி ஊற்ற வேண்டும்.

இதனால் இந்நோய் அருகில் உள்ள செடிகளுக்கு பரவுவதை தடுக்கலாம். ஒரு வாரத்திற்கு பின்னர் ஏக்கருக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 50 கிலோ அங்கக உரத்துடன் கலந்து மண்ணின் மேற்பரப்பில் ஈரப்பதம் இருக்கும் சமயத்தில் இட வேண்டும். இவ்வாறு செய்வதினால் பருத்தி பயிரை வேரழுகல் நோயிலிருந்து காப்பாற்றலாம், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!