Country-made bombs near Perambalur bus stand; The police seized and investigated!
பெரம்பலூர் அண்ணா (புதிய) பேருந்து நிலையம் அருகே இலங்கை அகதிகள் முகாம் செல்லும் வழியில் அரசுக்கு சொந்தமான காலி புறம் போக்கு இடம் உள்ளது. அதில், உள்ளங்கையில் கைப்பிடி கொண்ட, வெடிக்காத பேப்பரால் தயாரிக்கப்பட்ட 15 நாட்டு வெடிகுண்டுகள் பேக் ஒன்றில் கிடப்பது குறித்து போலீசாருக்கு அதனை பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். பின்னர், அது உண்மையிலேயே வெடிகுண்டா, அல்லது எவரேனும் சமூக விரோத செயலுக்கு கொண்டு வந்தார்களா? எங்கு தயாிக்கப்பட்டது? அந்தப்பகுதியில் எப்படி வந்தது என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நாட்டு வெடிகுண்டுகள் கிடந்த சம்பவம் இன்று மாலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.