Court boycott in Perambalur demanding implementation of Lawyers Protection Act!
பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகக் குழுவின் அவசர கூட்டம் தலைவர் இ.வள்ளுவன் நம்பி தலைமையில் நேற்று நடந்தது. அதில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க,
நாமக்கல் மூத்த வழக்கறிஞரும் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளருமான செல்வராசாமணியை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நாமக்கல் மாவட்ட மோகனூர் காவல் நிலைய போலீசாரால் பொய் வழக்கில் கைது செய்திருப்பதை இச்சங்கம் வன்மையாக கண்டிப்பது, தமிழகத்தில் சமீப காலமாக வழக்கறிஞர்கள் தாக்கப்டுவதும், படுகொலை செய்யப்படுவதும் தொடர்ந்து வருவது தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதையே காட்டுகிறது.
நாமக்கல் வழக்கறிஞர் மணிகண்டன் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்க தக்கது. எனவே தமிழகத்தின் வழக்கறிஞர்களின் பாதுகாப்பின் அவசியத்தை தமிழக அரசு உணர்ந்து வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியறுத்தி இன்று திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளிலிருந்து விலகி இருப்பதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.