Court notice of 5 absconding persons declared guilty without appearing in the warrant

பெரம்பலூர் மாவட்டத்தில் பிடிக்கட்டளை பிறப்பிக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருக்கும் 5 பேரை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளிகளாக கோர்ட் அறிவித்தது.

பெரம்பலூரைச் சேர்ந்த மருதமுத்து மகன் ரவிக்குமார். இவரது தம்பி பிரபாகரன். கடந்த 1998ம் ஆண்டில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், காந்தி நகரை சேர்ந்த முகமது காசிம் மகன் நூருதீன் (54), சென்னை ஆழ்வார் பேட்டை பீமன்னா முதலி தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் நாராயணசாமி, தஞ்சாவூர் மாவட்டம், பண்டாரவடை கோவில் தேவராய கோட்டையை சேர்ந்த காதர்மீனரான் மகன் முகைதீன் (54), பாம்பே வாசிநியூ, பகுதியை சேர்ந்த அப்பாஸ்கான் மகன் ரைஷ் முகமது (47), பாம்பே கிராம்டா பகுதியை சேர்ந்த அக்தர்கான் மகன் சேக் தாத்கான் (43) ஆகியோர் ரவிக்குமாரை சந்தித்து தங்களது தம்பி பிரபாகரனுக்கு துபாயில் உள்ள பெப்சி கோலா நிறுவனத்தில் பொதுமேலாளராக வேலை வாங்கி தருவதாகவும், பிரபாகரனை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு விசா எடுக்க வேண்டும். அதற்கு முன்பணமாக ரூ .60 ஆயிரம் கட்டவேண்டும் என கூறி பணம் பெற்றுள்ளனர். இதையடுத்து ஒரு போலியான விசா நகலை கொடுத்து ஏமாற்றிவிட்டனர் .

இதனால் ஏமாற்றமடைந்த ரவிக்குமார் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து நூருதீன் உட்பட
5 குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து கடந்த 1999ம் ஆண்டு ஜனவரி 5ம்தேதி ஜாமீனில் சென்றவர்கள் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் குற்றவாளிகள் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் குற்றவாளிகள் 5 பேரும் கோர்ட்டில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமைறைவாக இருந்து வருகின்றனர். இதனால் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட் நீதிபதி பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் என U/s 82 குற்ற விசாரணை முறைச்சட்டத்தின்படி அறிவித்துள்ளார். எனவே குற்றவாளிகள் பற்றிய தகவல் தெரிந்தால் பெரம்பலூர் மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என எஸ்பி ஷ்யாம்ளாதேவி தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!