Crackdown on those billboards proper permission – Perambalur RDO warning.
பெரம்பலூர் : அச்சக உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி தலைமையில் இன்று (22.07.16) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் பேசியதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் வைக்கப்படும் பிளக்ஸ் போர்டு மற்றும் விளம்பர பதாகைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உரிய அனுமதி பெற வேண்டும்.
அவ்வாறு அனுமதி பெற்று வைக்கும் விளம்பர பதாகைகளில் அதற்கான அனுமதி எண் நிச்சயம் இடம் பெற வேண்டும். அவ்வாறு அனுமதி எண் இன்றி வைக்கப்படும் அனைத்து பிளக்ஃஸ் போர்டு மற்றும் விளம்பர பதாகைகளும் அந்த இடத்திலிருந்து அகற்றப்படுவதுடன் தொடர்புடைய அச்சக உரிமையாளர்கள் மீதும், தொடர்புடைய நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பிளக்ஃஸ் போர்டு மற்றும் விளம்பர பதாகைகளில், சமூகம் மற்றும் மதம் தொடர்புடைய வாசகங்கள் மற்றும் அடையாளங்கள் இடம்பெற கூடாது. மேலும் தாங்கள் நிறுவனத்தின் மூலமாக தயார் செய்யப்படும் பிளக்ஃஸ் போர்டு மற்றும் விளம்பர பதாகைகள் மூலமாக சமுதாயத்தில் ஏதேனும் பிரச்சனைகள் வருவதாக தெரிந்தால், அவ்வகை பிளக்ஸ் போர்டு மற்றும் விளம்பர பதாகைகளை அச்சக உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்.
மேலும், அச்சக உரிமையாளர்கள் தங்களிடம் பிளக்ஃஸ் போர்டு மற்றும் விளம்பர பதாகைகள் தயாரிக்க வருகைப் புரிபவர்களின் தொலைபேசி எண் மற்றும் முழு முகவரிகளைகளையும் சேகரித்து வைக்க வேண்டும்.
இவ்வாறாக மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் இது போன்ற நடவடிக்கைகளுக்கு அச்சக உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இதன் மூலம் சமுதாயத்தில் சமூக மற்றும் மத ரீதியிலான பிரச்சனைகள் எழமால் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியும், என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் துணை காவல் கண்கானிப்பாளர் ஜவஹர்லால், வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன் (பெரம்பலூர்), மனோன்மணி(வேப்பந்தட்டை) மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அச்சக உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.