Credit Project Report of Rs 3,100 crore for the year _ 2016 – 17 perambalur district funds target

பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2016-17ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை ரூ.3,100 கோடி வங்கிகள் இலக்கு

bankers-meeting

பெரம்பலூர் மாவட்ட அளவிலான வங்கியாளர்களின் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பாக குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமசந்திரன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் 2016-17 ஆம் ஆண்டில் தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம புற வங்கிகளின் மூலமாக ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கியின் வழிகாட்டுதலின் படி ரூ.3,100 கோடி கடன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2014-15ம் வருடத்தில் மாவட்டத்தின் இலக்காக ரூ.2488 கோடியும், 2015-16ம் வருடத்தில் ரூ.3000 கோடியும், பெரம்பலூர் மாவட்டத்திற்கு கடன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையில் 2016-17ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை மாவட்ட முன்னோடி வங்கியான, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் ரூ.3,100 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், விவசாய கடன்களுக்காக ரூ.2,325 கோடியும், விவாசயம் சார்ந்த தொழிலுக்கு 217 கோடி ரூபாயும், இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ.558 கோடியும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த வருடத்தை விட ரூ.100 கோடி வங்கிகளுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயம் 75 சதவீதமும், விவசாயம் சார்ந்த தொழில் 7 சதவீதமும் இதர முன்னுரிமை கடன்களுக்கு 18 சதவீதம் ஆகும்.

மேலும், அரசாங்க நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு வங்கியாளர்களின் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் வங்கிகளின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு சிறப்பான முறையில் சென்றாடைய கடன் உதவிகளை வங்கிகளின் மூலம் துரிதமாக வழங்க வேண்டும், என பேசினார்.

அதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 81 வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து இக்குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மற்றும் அரசாங்க துறைகள் மகளிர் திட்டம், புது வாழ்வு திட்டம், கறி கோழி வளர்ப்பு திட்டம், மாவட்ட தொழில் மையம், சார்ந்த கடன் திட்டங்களின் நிலைபாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரால் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் வங்கி மேலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!