Criticism of Supreme Court judge: Writer Bhadriseshadri’s bail plea to be heard tomorrow
பிரபல பதிப்பாளர் பத்ரிசேஷாத்ரி ஜாமின் மனு நாளை குன்னம் மாவட்டஉரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கவிதா முன்பு விசாரணைக்கு வருகிறது.
மணிப்பூர் சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை அவதூறாக பேசியதாக கூறி பத்ரிசேஷாத்ரியை குன்னம் போலீசார் கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில் அவர் இன்று ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமின் மனு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.
இந்நிலையில், பத்ரி சேஷாத்ரியை கஷ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு குன்னம் போலீசார் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர், இந்த மனுவும் நாளை விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.