Criticism of the Supreme Court judge: Writer Bhadriseshatri arrested! Action on Perambalur lawyer’s complaint!!
உச்சநீதிமன்ற நீதிபதி குறித்து விமர்சனம் செய்து யூடிப் சேனலில் பேசியதற்கு வக்கீல் கொடுத்த புகாரின் பேரில், பிரபல புத்தக பதிப்பாளரும், எழுத்தாளருமான பத்ரி ஷேசாத்தரியை பெரம்பலூர் மாவட்ட போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், காடூரை சேர்ந்த வக்கீல் கவியரசன் என்பவர் போலீசில் கொடுத்த புகாரில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை தனியார் யூடிப் சேனலில் விமர்சித்தாக பிரபல பிரபல புத்தக பதிப்பாளரும், எழுத்தாளருமான பத்ரி ஷேசாத்தரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்து இருந்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து, சென்னை மயிலாப்பூர் வீட்டில் தங்கி இருந்தவரை கைது இன்று காலை பெரம்பலூர் மாவட்டம், குன்னம் போலீஸ் ஸ்டேசன் அழைத்து விசாரணை நடத்தி, 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து குன்னம் நீதிமன்றத்தில், ஆஜர் படுத்தினர்.
நீதிபதி உத்தரவின் பேரில் 15 நாள் சிறைக்காவலுக்கு, பத்ரி ஷேசாத்தரியை அனுப்பி வைத்தனர்.