Cuddalore, Perambalur Ariyalur districts border area residents are agitated that the planes have crashed due to low flying with black smoke!
இன்று காலை போர் பயிற்சியில் ஈடுபடும், ஜெட் ரக விமானங்கள் தமிழக வான்வெளியில் எப்போதாவது பறக்கும். அது மட்டுமில்லாமல் சென்னை – திருச்சி, சென்னை -கோவை, சென்னை – கேரளா விற்கு விமானங்கள் செல்வதுண்டு.
சென்னை – தாம்பரம், மற்றும் கோவை சூலூர் பகுதிகளில் இருந்து பயிற்சி விமானங்கள் பறக்கும். இந்நிலையில் இன்று காலை சுமார் 11 மணிக்கு மேல், பலத்த சத்தத்துடன் வானில் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. அதில் ஒன்று தாழ்வாக பறந்து மேலே எழும்பி பறந்தது. அப்போது கரும்புகை கக்கியவாறு சென்றுள்ளது. இதை வான்வெளியில் பார்த்த மக்கள் வனப்பகுதியில் விழுந்து விட்டதாக தகவல் பரவத் தொடங்கியது.
இது குறித்து தகவல் அறிந்த 3 மாவட்ட வருவாய் மற்றும் காவல் துறையினர் வயலப்பாடி, கீரனூர், வீரநல்லூர், அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதியிலும், தளவாய் மற்றும் பெண்ணாடம் – உளுந்தூர்பேட்டை வரை பரபரப்பாக தேடினர். எதுவும் கிடைக்கவில்லை.
சிலர் சமூக ஊடகங்களில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விழுந்து விபத்திற்குள்ளான படங்களை பகிர்ந்து வதந்தி பரப்பினர். அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி இது வெறும் புரளி என விசாரித்து முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த சம்பவத்தால், 3 மாவட்ட போலீசார், வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்களிடையே சில மணிநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.