Cuddalore Zone-level kabaddi Selection Competitions: happen at Perambalur

model
பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் விடுத்துள்ள தகவல் :
இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பாக பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்விதுறை சார்பாக கடலூர் மண்டல அளவிலான தெரிவு போட்டிகள் வரும் ஆக 26. அன்று பாடாலூரில் உள்ள அம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
இப்போட்டியானது வயது மற்றும் பிரிவு வாரியாக U-14, U-17, U-19 ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தனித்தனியே நடத்தப்பட உள்ளது.
இப்போட்டிகளில், பெரம்பலூர் அரியலூர், கரூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களை சார்ந்த போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்க இயலும்.
இப்போட்டிகளில் பங்குபெற பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தகுந்த பூர்த்தி செய்யப்பட்ட இரண்டு நுழைவு படிவங்களுடன் பங்கு பெறலாம்.