Cultural Pongal Festival at Allmighty Vidyalaya Public School near in Perambalur
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா சிபிஎஸ்இ பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் பள்ளி தாளாளர் டாக்டர் ஆ.ராம்குமார் தலைமை நடந்தது. பள்ளிமுதல்வர் சிவகாமி அனைவரையும் வரவேற்றார். விழாவில் பெண்களுக்கான கோலப்போட்டி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கலாசார கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முதலில் பொங்கிய பொங்கல் பானை வைத்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. துணை முதல்வர் சாரதாசெந்தில்குமார் ஆசிரியைகள் சந்திரோதயம் ஹேமா, ஜாய்ஷகிலா, மற்றும் தமிழ்செல்வன், மணிகண்டன் மற்றும் பள்ளியின் பங்குதாரர்கள், பள்ளி பணியாளர்கள் உள்பட ஏராளமான மாணவர்களின் பெற்றோர்களும் திரளாக பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.