Customer Service Training for SC, ST, Youth to Work at Airport: Perambalur Collector Info!

தாட்கோ மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு விமான நிலையத்தில் பணிபுரிய வாடிக்கையாளர் சேவை பயிற்சியினை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பி.டி.சி ஏவிஷேன் அகாடமி நிறுவனம் மூலமாக விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சியினை அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியினை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கும், கல்வித் தகுதியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதமும் விடுதியில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகையான ரூ.20,000/- யும் தாட்கோ வழங்கும்.

இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஏரோ ஸ்பேஸ் ஸ்கில் செக்டார் கவுன்சிலால், அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களான Indigo Airlines, Spice Jet, Go First, Vistra, Air India போன்ற புகழ் வாய்ந்த நிறுவனங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என தாட்கோ மேலாண்மை இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, பயன் பெறுமாறு கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!