Cyclone Mandous: Orange alert for Perambalur district; Ready Progress Tasks: Collector’s Order!

தமிழகத்தில் வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி (மாண்டஸ்) உருவாகியுள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்டினை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனை முன்னிட்டு புயல் மழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் இன்று ஆன்லைன் வழியாக அவசர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

9.12.2022 வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பல மாவட்டங்களில் மிக கனமழைக்கான, ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பெரம்பலூர் மாவட்டமும் ஒன்று. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள், வீடு இடிந்து விழும் சூழலில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி, தற்காலிக முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்திடவும், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதை சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி செய்யவும்,

விசுவக்குடி அணை, ஏரி, குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளிலும் உள்ள நீர் இருப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படவும். நீர்நிலைகளின் கரைகள் பாதுகாப்பாக பலமாக உள்ளதா என்பதை பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் உடனடியாக ஆய்வு செய்து அது குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும். தொடர் மழை காரணமாக நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படுதல், குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகும் வாய்ப்புள்ள பகுதிகளில் தேவையான அளவு மணல் மூட்டைகளையும், ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரங்களையும் தாயர் நிலையில் வைத்திருக்க வேண்டும், என்றும் தொடர் மழை நேரத்தில் மின்கசிவு எங்கும் ஏற்படாத வகையில் மின்சாரத்துறையினர் கவனமுடன் பணியாற்றவும்,

மாவட்டத்தில் 12,265 மணல் மூட்டைகளும், 126 ஜெனரேட்டர்களும், 96 மரம் அறுக்கும் இயந்திரங்களும், 166 ஜேசிபி இயந்திர வாகனங்களும், 147 பொக்லைன் வாகனங்களும், 109 நீர் உறிஞ்சும் இயந்திரங்களும், 4 படகுகளும், 105 கொசுமருந்து தெளிக்கும் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளது. இது தவிர பேரிடர் காலங்களில் மீட்புப் பணிக்குத் தேவையான அனைத்து விதமான ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளரது.

பள்ளி வளாகங்களில் நீர்க்கசிவு, மின்கசிவு இல்லாததை சம்மந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்து உறுதி செய்திடவும். குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும், தொற்று ஏற்படாத வகையில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கவும், சுகாதாரத்துறை அலுவலர்கள் மருத்துவ முகாம்களை நடத்திட வேண்டும். அவசர சூழலை கருத்தில் கொண்டு அனைத்துத்துறை அலுவலர்களும் விழிப்புடன் இருந்து ஒருங்கிணைந்து செயல்பட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!