Daily in 100 days of work Rs. 20 collections, the Panchayat office that did not fix the basic facilities, locked and blockaded the village council meetings in Perambalur district!

பெரம்பலூர் மாவட்டத்தில், காந்தி பிறந்த நாளான இன்று 121 கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டங்கள் அந்தந்த ஊராட்சித் தலைவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. அரசின் திட்டங்கள் எடுத்துரைக்கப்பட்டது.

இதில் கலெக்டர் கற்பகம் ஆலத்தூர் யூனியனில் உள்ள கொளத்தூர் ஊராட்சியில் கலந்து கொண்டார். அப்போது, கிராம சபையில் கூட்டத்தில், வரவு – செலவு, அரசு திட்டப்பணிகள், கோரிக்கைகள் குறித்த மனுவும் கொடுத்தனர். முன்னதாக பொதுமக்கள் கலெக்டர் கற்பகத்திடம், கிராமத்திற்கு தேவையான சமுதாயக் கூடம், சாக்கடை, தண்ணீர் டேங் சுத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரித்தனர். அப்போது கூட்டத்தில் இருந்து எழுந்த ஒருவர் ஊராட்சியில் 100 நாள் வேவைத்திட்டத்தில், தினமும் ரூ.20 வீதம் 120 வசூல் செய்து வருகிறார்கள். மாதம் ரூ. 2 லட்சம் வருகிறது. அந்த பணத்தை என்ன செய்கிறார்கள் என்பதை இந்த சபையில் தெரிவிக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர். ஆனால்..

கலெக்டர் கற்பகம் மைக்கில் வேறு யாரிடமாவது இது வசூலிக்கிறார்களா என கேட்டார். ஆனால், அங்கிருந்தவர்கள் ஏதோ ஒரு அச்சத்தால் அமைதி காத்தனர். பின்னர், கலெக்டர் கற்பகம் இனிமேல் வசூல் செய்யமாட்டார்கள் என தெரிவித்தார்.

இதே பெருமத்தூர் கிராமத்தில், ஊராட்சி தலைவர் அடிப்படை வசதிகளை முறையாக செய்து தரவில்லை என 4 கிராம மக்கள் ஊராட்சி மன்ற நுழைவு கேட்டைபூட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், வேப்பூர் பிடிஓ செல்வகுமார் பேச்சுவார்த்தை நடத்தி அடிப்படை தேவைகளை செய்து தருவதாக உறுதி அளித்தன் பேரில் கலைந்து சென்றனர்.

இதே போல வெங்கலம் ஊராட்சி கிருஷ்ணாபுரத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில், குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு, கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள் நிர்வாகத்தை பொதுமக்கள் அறியும் வண்ணம் இன்னும் வெளிப்படையாக இணையம் மற்றும் தகவல் பலகைகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

வெறுத்துப்போன பஞ்சாயத்து தலைவர்கள்:

ஒவ்வொரு கூட்டங்களுக்கும் வரும் அரசு அதிகாரிகளின் வாகனத்தை ஓட்டி வருபவர்கள் ஊராட்சித் தலைவர்களிடம் வரிசையாக வந்து நிற்பதால், திட்டமிட்ட செலவுகளுடன் கூடுதலாக திட்டமிடாத செலவுகளை கண்டு தலைவர்கள் வெறுத்து போய் உள்ளனர். ஆனால், இவர்களுக்கு சம்பளம் சுமாராக அரை லட்சத்திற்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!