Daily Vegetable Market Vendors Appeal to Municipal Commissioner of Perambalur

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டுவந்த தினசரி காய்கறி மார்க்கெட் ஊரடங்கு உத்தரவின் காரணமாக மூடப்பட்டது.

இதனால் காய்கறி மார்க்கெட்டில் கடை நடத்தி வந்த 200க்கும் மேற்பட்ட காய்கறி விற்பனையாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து, தங்களது குடும்ப தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, தங்களது வாழ்வாதாரத்தை காக்க பெரம்பலூர் தினசரி காய்கறி மார்க்கெட்டை உடனடியாக திறக்க வலியுறுத்தி, காய்கறி வியாபாரிகள் நல சங்கத்தினர் 150க்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது கோரிக்கை மனுவை நகராட்சி ஆணையரிடம் அளித்தனர்.

கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட நகராட்சி ஆணையர் குமரிமன்னன், கோரிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காய்கறிகள் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து காய்கறி விற்பனையாளர்கள் கலைந்து சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!