Damage to Siruvachchur temple idols; Jaisankar Founder of Vijayabharata People’s Party request to the Chief Minister of Tamil Nadu to conduct Kumbabhishekam!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமம் மதுரகாளியம்மன் திருக்கோயிலின் உப ஆலயங்களான செங்காமலையார் திருக்கோயில், பெரியாண்டவர் திருக்கோயில், செல்லியம்மன் திருக்கோவில், பெரியசாமி திருக்கோயில், ஆகியவை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி மாவட்ட மக்களின் குலதெய்வமாக வழிபாட்டு நடைமுறையில் இன்று வரை உள்ளது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறையிக் கீழ் இருக்கும் இந்த கோவலில் கடந்த வாரங்களாக சமூகவிரோதிகள், ஆலயங்களில் உள்ள விக்ரகங்களை உடைத்து எறிந்துள்ளனர். இதை விஜயபாரத மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாவட்ட நிர்வாகத்தால் காவல்துறை பாதுகாப்பு, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது, வரவேற்கத்தக்கது.
இச்சம்பவம், இந்துக்கள் மத்தியில் மிகப் பெரிய வருத்தத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கி உள்ளது. உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், சேதப்படுத்தபட்டுள்ள நான்கு ஆலயங்களின் சுடுமண் விக்கிரகங்களை அகற்றி விட்டு புதிதாக விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து அந்தந்த ஆலய ஆகமவிதிப்படி சுத்தி பூஜை பரிகார பூஜை மற்றும் கும்பாபிஷேகம், நடத்தி மீண்டும், பக்தர்கள் வழிபாட்டிற்கு வழி செய்ய வேண்டும், என அவர் முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோயிலை பார்வையிட்ட விஜயபாரத மக்கள் கட்சி நிறுவனர் கோ. ஸ்ரீ.ஜெய்சங்கருடன், மாநில துணைத் தலைவர் கிருஷ்ணகிரி சீனிவாசன், பெரம்பலூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர்கள் பிராபாகரன் மற்றும் சுகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.