daughter-in-law who collected votes for father-in-law; Free education will continue for poor students in Perambalur MP Constituency!!
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பெரம்பலூர எம்.பி தொகுதிக்கான வேட்பாளராக ஐஜேகே சார்பில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர் தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொட்டையூர், கோனப்பாதை, முருகூர், சிக்கதம்பூர், ரங்கநாதபுரம், வேங்கடத்தனூர், செங்காட்டுப்பட்டி, புத்தனம்பட்டி ஆகிய பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கடந்த 5 ஆண்டுகளில் தான் செய்த சாதனைகளை புத்தகமாக வெளியிட்டு பொதுமக்களிடம் வழங்கினார். எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் இது போல் தனது சாதனைகளை புத்தகமாக வெளியிட்டதில்லை என்றும் கூறினார். மேலும், அழியாத செல்வமான கல்வி செல்வத்தை 1200 குடும்பங்களுக்கு 1200 மாணவர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டில் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார். எனவே, மீண்டும் தன்னை தாமரை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால் 1200 மாணவர்களை மீண்டும் மேல் படிப்பு படிப்பதற்கு உதவி செய்வதோடு 1500 குடும்பங்களுக்கு இலவச உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதாக உறுதி அளித்தார்.
வேங்கடத்தனூரில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது வேட்பாளர் பாரிவேந்தரின் மருமகள் மங்கையர்கரசி திடீரென பிரச்சார வாகனத்தின் மீது ஏறி பொதுமக்களிடம் அனைவரும் சாப்பிட்டீர்களா! என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்!! யாருக்கு வாக்களிப்பீர்!! என இயல்பாக பேசினார். பின்னர், பார்வேந்தரின் சாதனைகளை விளக்கி தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பொதுமக்களும் இயல்பாக வாக்கு சேகரித்த பாவேந்தரின் மருமகள் பிரச்சாரம் பொது மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
பிரச்சாரத்தில் ஐஜேகே பொதுச் செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர் சத்யநாதன், முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் சபா ராஜேந்திரன், கடலூர் மண்டல தலைவர் தர்மலிங்கம், திருச்சி வடக்கு மாவட்ட இணை செயலாளர் பாஸ்கர், திருச்சி மாவட்ட தலைவர் பழனிசாமி, திருச்சி வடக்கு மாவட்ட துணை தலைவர் ராஜ், துணை செயலாளர் நல்லசாமி விஜயன், அமமுக திருச்சி மாவட்ட செயலாளர் ராஜசேகரன் துறையூர் நகர செயலாளர் பீரங்கி சுப்ரமணியன், ஒன்றிய செயலாளர் மோகன்தாஸ் மற்றும் பாஜக, பாமக, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.