பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளையும், தேசிய வாக்காளர; தினத்தையொட்டி கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்ட ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடிவினா போட்டி, கோலப்போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் இன்று 25.01.16 வழங்கினார்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
முதல் முறையாக வாக்களிக்க உள்ள 18 வயது பூர்த்தி அடைந்த நீங்கள் ஒவ்வொருவரும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து மக்களாட்சி தத்துவமான “மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சி” என்பதை மெய்பிக்கும் வகையில் வருகின்ற தேர;தலில் அனைவரும் வாக்களிப்பதுடன், தங்களின் சுற்றத்தில் உள்ள அனைவரையும் வாக்களிக்க வைப்பதும் நமது கடமையாகும். தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காகவும், வாக்களிப்பதன் மூலம் ஒரு தேசத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்றகாக மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக மக்களுக்கு பல்வேறு வகையிலான விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத அளவாக பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 2,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்த மாரத்தான் ஓட்டம் நேற்று நடைபெற்றது. இப்போட்டிகளில் பங்கெடுத்து ஓடிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரித்துகொள்கிறேன்.
சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள் நடைபெற்றதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தகுதியுடைய 15 ஆயிரத்து 771 புதிய வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இவர்களுக்கு இன்று முதல் வண்ண புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை சம்மந்தப்பட்ட வாக்குசாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்படும், என்று தெரிவித்தார்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நல அலுவலர் , தேர்தல் பிரிவு வட்டாட்சியர் மனோன்மணி, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வ.சந்திரமவுலி, உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.